பாக்காதே என்ன பாக்காதே | Tamil Karoke Track



பாக்காதே என்ன பாக்காதே
கொத்தும் பார்வையாலே என்னை பாக்காதே
போகாதே தள்ளி போகாதே
என்ன விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாதே
கொடுத்ததை திருப்பி நீ கேட்க காதலும் கடனும் இல்ல
கூட்டத்தில் நின்னு பார்த்துக்கொள்ள நடப்பது கூத்தும் இல்ல

வேணாம் வேணான்னு நான் இருந்தேன்
நீ தானே என்னை இழுத்து விட்டே
போடி போடின்னு நான் தொரத்த
வம்புல நீ தானே மாட்டிவிட்ட
நல்லா இருந்த எ மனச
நாராக கிழிச்சு புட்ட
கருப்பா இருந்த என் இரவ
கலராக மாத்தி புட்ட

என்னுடம் நடத்த என் நிழல
தனியா நடக்க விட்ட
உள்ளே இருந்த என் உசுர
வெளியே மிதக்க விட்ட

வேணான் வேணான்னு நினைக்கலையே
நானும் உன்னை வெறுக்கலையே
காணும் காணூனு நீ தேட காதல் ஒன்னும் தொலையலே
ஒன்ன இருந்த நியபகத்தை நெஞ்சோடு சேர்த்து வச்சேன்
தனிய இருக்கும் வலிய மட்டும் தனிய அனுபவிச்சேன்

பறவையின் சிறகுகள் பிரிஞ்சாதான்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும் காதல் அதிகரிககும் ....

பாக்காதே என்ன பாக்காதே
கொத்தும் பார்வையாலே என்னை பாக்காதே
போகாதே தள்ளி போகாதே
என்ன விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாதே
கொடுத்ததை திருப்பி நான் கேக்க கடனா கொடுக்கலையே
உனக்குள்ள தானே நானிருக்கேன் உன்னக்கது புரியலையே...

நன்றி : என் கனவே பிளாக் ஸ்பாட்

என்ன இது என்ன இது என்னை கொல்வது | Tamil Karoke Track




என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது
என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது
புதிதாக ஏதோ நிகழ்கின்றது
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றது
நாடி எங்கும் ஓடியொரு கோடி மின்னல் கோலமிடுதோ

என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது

யாரிடத்தில் யாருக்கொரு காதல் வருமோ
பூமி எதிர்பார்த்து மழைத்தூறல் விழுமோ
காதல் வர கால் விரல்கள் கோலமிடுமோ
கைநகத்தை பல்கடிக்க ஆசைப்படுமோ
எதுவுமே... எதுவுமே... எதுவுமே..
எதுவுமே நடக்கலாம்
இறகின்றி இளமனம் பறக்கலாம்
இதுவரை விடுகதை
இனிவரும் கதை ஒரு தொடர்கதை
வேண்டும் வசந்தம் வாசல் வரலாம்
ஊமைக்கொரு வார்த்தை வந்து பாடுகின்ற வேளை இது

என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது

காற்றடித்து அணைவதில்லை காதல் அகல் தான்
சாட்சியென நிற்கிறது தாஜ்மஹல் தான்
கல்லறையில் உறங்கும் அந்த காதல் என்பது
கண்ணுறக்கம் நீங்கி இங்கு கண் விழித்தது
இனி வரும்....
இனி வரும் இரவெல்லாம்
சீனத்தின் சுவரைப்போல் நீளலாம்
உனக்கு நான் பிறந்தவள்
மனமெனும் கதவைத்தான் திறந்தவள்
காதல் பிறந்தால் காவல் கடக்கும்
போட்டுவைத்த கோட்டுக்குள்ளே காதலென்றும் நின்றதில்லை

என்ன இது என்ன இது என்னை கொல்வது
என்னவென்று கேட்பவர்க்கு என்ன சொல்வது
புதிதாக ஏதோ நிகழ்கின்றது
புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றது
நாடி எங்கும் ஓடியொரு கோடி மின்னல் கோலமிடுதோ

படம் : நள தமய்ந்தி
இசை : ரமேஷ் விநாயகம்
பாடியவர்கள் : ரமேஷ் விநாயகம், சின்மயி

நன்றி : தேன்கிண்ணம்
 

பூம் பூம் சிக்குகான் கரோகே டிராக் (Tamil Karoke Track)



பூம் பூம் சிக்குகான்
சிக்குகான் கான்
பூம் பூம் ஹெய் ஹெய்
பூம் பூம் சிக்குகான்
சிக்குகான் கான் பூம் பூம்

காதல் இது தான் அது தான்
என்று கேட்குமா?
காதல் இதயம் எதயும்
எதிர்பார்க்குமா?
முள்ளின் மீது காக்கை குஞ்சி
தூங்க வில்லைய
ஏய் குப்பை மேட்டில் ரொஜ செடி பூப்பதில்லைய?
கொட்டாங்குசி கூறை போதும்
நம் காதல் வாழும்
தங்க பஷ்பம் தேவையில்லை தண்ணீரே போதும்
காதல் இது தான் அது தான்
என்று கேட்குமா?
காதல் இதயம் எதயும்
எதிர்பார்க்குமா?

(பூம் பூம்...)

காதல் நுழைந்தால்
காய்லாங்கடையும் கொலர் வயலாகும்
ஓட்டை உடைசல் காதல் நுழைந்தால்
புல்லாங்குழல் ஆகும்
மரம் இழைத சுருள் விரிந்து
மலர் படுக்கை செய்வோம்
முகம் உடந்த பொட்ட்ெஸ்'க்குள்
அகல் விளக்காய் வாழ்வோம்

காதல் இது தான் அது தான்
என்று கேட்குமா?
காதல் இதயம் எதயும்
எதிர்பார்க்குமா? (2)

பூம் பூம் சிக்...

காளான் குடைகள்
கட்டி தழுவும் அட்டை என வாழ்வோம்
நூலாம்படயில் பூசி இரண்டாய்
ஊஞ்சல் ஆடி வாழ்வோம்
மழை குழைத சேற்றின் மேல்
மண் புழுக்கள் நீ நான்
அழுகிவிட்ட மாம்பழதில் இரு வண்டுகள் நாம் தான்

காதல் இது தான் அது தான்
என்று கேட்குமா?
காதல் இதயம் எதயும்
எதிர்பார்க்குமா?
முள்ளின் மீது காக்கை குஞ்சி
தூங்க வில்லைய
ஏய் குப்பை மேட்டில் ரொஜ செடி பூப்பதில்லைய?
கொட்டாங்குசி கூறை போதும்
நம் காதல் வாழும்
தங்க பஷ்பம் தேவையில்லை தண்ணீரே போதும்
காதல் இது தான் அது தான்
என்று கேட்குமா?
காதல் இதயம் இதயம்
எதிர்பார்க்குமா?

(பூம் பூம்...)

வண்ணம் கொண்ட வெண்ணிலவே - கரோகே



வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை உன்னைத்தொட ஏணியில்லை

(வண்ணம்)

பக்கத்தில் நீயுமில்லை பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை சுவாசிக்க ஆசையில்லை
கண்டுவந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை
தள்ளித்தள்ளி நீயிருந்தால் சொல்லிக்கொள்ள யாருமில்லை

(வண்ணம்)

நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி
கண்ணிரண்டில் பார்த்திருப்பேன் கால்கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன்வந்து சேரும்வரை தேகம்போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன்

(வண்ணம்)


படம்: சிகரம்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து
இசை: எஸ் பி பாலசுப்ரமணியம்


நன்றி : தேன்கிண்ணம் பிளாக் ஸ்பாட்
 

நீதான் என் தேசிய கீதம் கரோகே டிராக்



படம்: பார்த்தாலே பரவசம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: பால்ராம், சித்ரா
வரிகள்: வாலி

காதலே ஜெயம்....

நீதான் என் தேசிய கீதம்
ரஞ்சனோ ரஞ்சனா
ரஞ்சனோ ரஞ்சனா
நீதான் என் தேசிய கீதம்
ரஞ்சனோ ரஞ்சனா
என் ஒரே பாடலே
உயிர் காதலே
என் மரியாதைக்கு உரியவளே
மனதிற்கு இனியவளே
காலையும் நீயே
மாலையும் நீயே
கனவிலும் நீயே
நனவிலும் நீயே
(நீதான் என் தேசிய கீதம்...)


என் பிறவா மழலைகளை - உன்
விழியில் பார்க்கிறேன்
என் பிறவா மழலைகளை
விழியில் பார்க்கிறேன் - நான்
எழுதா கவிதைகளை
மொழியில் கேட்கிறேன் - உன்
மொழியில் கேட்கிறேன்
நான் வேண்டிய வரங்களை
வரவில் பார்க்கிறேன் - உன்
வரவில் பார்க்கிறேன்
என் விடியா இரவுகளை
உறவில் பார்க்கிறேன் - உன்
உறவில் பார்க்கிறேன்
காதலே ஜெயம் காண்பது உன் மயம்
என் மரியாதைக்கு உரியவளே
மனதிற்கு இனியவளே
(நீதான் என் தேசிய கீதம்...)


உடலால் வரும் சுகத்தை
உதறப் பார்க்கிறேன் - வெறும்
உடலால் வரும் சுகத்தை
உதறப் பார்க்கிறேன்
நாம் இறந்தும் இறவா நிலை
எதிர்பார்க்கிறேன்
எதிர்பார்க்கிறேன்
எல்லா எழுத்துக்கும்
உயிர் தொடக்கம்
உயிர் தொடக்கம் - என்
எல்லா உணர்வுக்கும் - என்
எல்லா உணர்வுக்கும்
நீ தொடக்கம்
நீ தொடக்கம்
காதலே ஜெயம்

காதலே ஜெயம்
அது கடவுளின் குணம்
என் மரியாதைக்கு உரியவளே
மனதிற்கு இனியவளே
காலையும் நீயே
மாலையும் நீயே
கனவிலும் நீயே
நனவிலும் நீயே
நீ தான் என் தேசிய கீதம்
உன் ஒரே பாடலே
உயிர்க் காதலே - என்
மரியாதைக்கு உரியவனே - இந்த
மண்ணிலும் பெரியவனே
காலையும் நீயே
மாலையும் நீயே
கனவிலும் நீயே
நனவிலும் நீயே
நீதான் என் தேசிய கீதம்
ரஞ்சனோ ரஞ்சனா
ரஞ்சனோ ரஞ்சனா


ஜேசுதாஸ் ஹிட்ஸ் பகுதி 2 - Jesudas Hits Part 2